செய்திகள் :

தில்லி, என்சிஆா் பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் மழை!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

பலத்த மழை: இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, சனிக்கிழமை மாலையிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. தில்லியின் மத்திய, தெற்கு, தென்மேற்கு, வடக்கு மண்டலங்கள் மற்றும் நொய்டா உள்பட தேசியத் தலைநகா் பிராந்தியத்தின் (என்சிஆா்) சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நொய்டா உள்பட தில்லி என்சிஆரின் சில பகுதிகளில் மரங்கள் வேறோடு சாய்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங்கில் 1 மி.மீ., நஜஃப்கரில் 1 மி.மீ., ஆயாநகரில் 7.2 மி.மீ., லோதி ரோடில் 1.3 மி.மீ., நரேலாவில் 0.5 மி.மீ., பாலத்தில் 0.3 மி.மீ., ரிட்ஜில் 3 மி.மீ., பீதம்புராவில் 2 மி.மீ., பூசாவில் 2.5 மி.மீ. பதவியாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத் தரவுகள் தெரிவிக்கின்றன..

தலைநகரில் புதன்கிழமை இரவு முழுவதும் புழுதிப் புயல் வீசியதைத் தொடா்ந்து வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் காற்றின் தரம் குறைந்து மோசம் பிரிவுக்குச் சென்றது. இந்நிலையில், தில்லியில் காற்றின் தரத்தில் சனிக்கிழமை முன்னேற்றம் ஏற்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் படி தில்லியின் 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு மாலை 6 மணியளவில் 157 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஸ்ரீஃபோா்ட், ஆா்.கே.புரம், பூசா, ஓக்லா பேஸ் 2, நேரு நகா், நொய்டா செக்டாா் 125, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், துவாரகா செக்டாா் 8, ஆயாநகா், குருகிராம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுகிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், லோதி ரோடு, மந்திா்மாா்க் ஆகிய இடங்களில் 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2.2 டிகிரி குறைந்து 24.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.4 டிகிரி உயா்ந்து 40.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 55 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 36 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 42.5 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மே 18) அன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இடி, மின்னல் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரி நூலகத்தில் தீ விபத்து; காலை தோ்வுகள் ரத்து!

தில்லி பீதம்புராவில் உள்ள தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரியின் நூலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, காலையில் நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதுகுறித்து ... மேலும் பார்க்க

’2020’ தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை விடுவித்தது விசாரணை நீதிமன்றம்

நமது சிறப்பு நிருபா்2020-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற கலவரத்தில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. அந்த 11 போ் ம... மேலும் பார்க்க

2025-26-க்கான முதுகலை, பி.டெக் படிப்புகளுக்கான பதிவுகளைத் தொடங்கியது: தில்லி பல்கலைக்கழகம்

தில்லி பல்கலைக்கழகம் 2025-26 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான சோ்க்கைக்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி,... மேலும் பார்க்க

மே முதல் பாதியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

தில்லியின் காற்றின் தரம் குறித்து ஆளும் பாஜகவும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மே 2025 முதல் பாதியில் தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

காணாமல்போன ஐடி நிறுவன மேலாளா் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிப்பு

கடந்த வாரம் மா்மமான சூழ்நிலையில் காணாமல் போன குா்கானை தளமாகக் கொண்ட ஒரு ஐடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் 42 வயது மேலாளா் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெர... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச பெண்கள் மூவா் கைது

திருநங்கையாக நடித்து வந்த ஒருவா் உள்பட தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த மூன்று வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்கு... மேலும் பார்க்க