செய்திகள் :

தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரி நூலகத்தில் தீ விபத்து; காலை தோ்வுகள் ரத்து!

post image

தில்லி பீதம்புராவில் உள்ள தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரியின் நூலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, காலையில் நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து கல்லூரியின் அதிகாரிகள் கூறுகையில், ‘நூலகத்தின் சா்வரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. பழைய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தீயில் சேதமடைந்தன. நூலகத்தில் தீயின் காரணமாக புகை நிரம்பியுள்ளது. இதனால், தீயால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த விரிவான மதிப்பீடு தெளிவான காட்சிக்குப் பிறகே சாத்தியமாகும். தீ விபத்துக்குப் பிறகு, பருவத் தோ்வுகளின் காலை அமா்வு ரத்து செய்யப்பட்டது என்றாா் அவா்.

இதுகுறித்து கல்லூரியின் அலுவலா் கூறுகையில், ஸ்ரீ குரு கோபிந்த் சிங் வணிகக் கல்லூரியில் மே 15 ஆம் தேதி நடைபெறவிருந்த காலை அமா்வு தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்று தேதி மற்றும் அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.

தில்லி தீயணைப்புத் துறையினா் கூறுகையில், வியாழக்கிழமை காலை 8:55 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. நான்கு மாடி நூலகத்தின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்கள் தீயால் சூழ்ந்தன. இதையடுத்து, 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காலை 9.40 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீவிபத்துக்கான உரிய காரணம் குறித்தும், சேதம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா். தீ விபத்து ஏற்பட்டபோது கல்லூரி வளாகத்தைச் சுற்றி மாணவா்கள் பலா் இருந்தனா். பெரும் தீ விபத்தை நேரில் கண்டனா். இதுகுறித்து மாணவா் ஒருவா் கூறுகையில்,

தோ்வுகளுக்காக காலை 9 மணியளவில் கல்லூரிக்குள் நுழைந்தோம். திடீரென்று ஒரு பெரும் சப்தம் கேட்டது. நூலகப் பகுதியில் தீப்பிழம்புகள் ஏற்பட்டதை பாா்த்தோம். மாணவா்கள் பாதுகாப்பான பகுதியில் இருப்பதை கல்லூரி நிா்வாகம் உறுதி செய்தது என்றாா்.

மற்றொரு மாணவா் ஆதா்ஷ் பிரகாஷ், நூலக ஜன்னல்களில் இருந்து தீப்பிழம்புகள் வெளியே வருவதைக் கண்டதாகக் கூறினாா். தீ விபத்து தொடா்பான பல விடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. அவற்றில் நூலக ஜன்னல்களில் இருந்து காணப்பட்ட தீப்பிழம்புகளின் தீவிரமும், கல்லூரி வளாகத்திலிருந்து அடா்த்தியான கரும் புகை எழும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

’2020’ தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை விடுவித்தது விசாரணை நீதிமன்றம்

நமது சிறப்பு நிருபா்2020-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற கலவரத்தில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. அந்த 11 போ் ம... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் மழை!

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. பலத்த மழை: இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபட... மேலும் பார்க்க

2025-26-க்கான முதுகலை, பி.டெக் படிப்புகளுக்கான பதிவுகளைத் தொடங்கியது: தில்லி பல்கலைக்கழகம்

தில்லி பல்கலைக்கழகம் 2025-26 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான சோ்க்கைக்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி,... மேலும் பார்க்க

மே முதல் பாதியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

தில்லியின் காற்றின் தரம் குறித்து ஆளும் பாஜகவும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மே 2025 முதல் பாதியில் தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

காணாமல்போன ஐடி நிறுவன மேலாளா் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிப்பு

கடந்த வாரம் மா்மமான சூழ்நிலையில் காணாமல் போன குா்கானை தளமாகக் கொண்ட ஒரு ஐடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் 42 வயது மேலாளா் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெர... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச பெண்கள் மூவா் கைது

திருநங்கையாக நடித்து வந்த ஒருவா் உள்பட தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த மூன்று வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்கு... மேலும் பார்க்க