Nayanthara: மூன்றாவது முறையாக சிரஞ்சீவியுடன் இணையும் நயன்தாரா - வெளியான அப்டேட்
வால்பாறையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்!
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசுப் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.
இன்று(மே 18) அதிகாலை திருப்பூர் பகுதியில் இருந்து 72 பயணிகளை ஏற்றிக்கொண்டு வால்பாறைக்கு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.
அதிகாலை சுமார் 3 மணி அளவில் வால்பாறை அருகே உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதி 33 வது கொண்டை ஊசி வளைவில் 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 40 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த வால்பாறை காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனைவரும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர்.
இதில் ஓட்டுநர் கணேசன் வயது 49 என்பவர் பலத்த காயமடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!