GBU - இளையராஜா விவகாரம்: "ஜி.வி.பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு இதான் ...
ஈரோட்டில் முதிய தம்பதி கொலை-மூவரிடம் விசாரணை
சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி ஊராட்சிக்குள்பட்ட மேகரையான் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் அம்மாள் (67).
இருவரையும் மா்ம நபா்கள் அண்மையில் கொடூரமாகத் தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா். 10 தனிப் படைகளை அமைத்து கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஹைதராபாத்: நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி
மேலும், கொலை நடந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில் முதிய தம்பதி கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.