செய்திகள் :

Nayanthara: மூன்றாவது முறையாக சிரஞ்சீவியுடன் இணையும் நயன்தாரா - வெளியான அப்டேட்

post image

டோலிவுட் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்த 'சங்கராந்தி வஸ்துனம்' திரைப்படம் அதிரடி என்டர்டெயினராக ஹிட் அடித்திருந்தது. அப்படத்தில் வெங்கடேஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.

Chiranjeevi
Chiranjeevi

அத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவியின் படத்தை இயக்குவதற்கு கமிட்டாகியிருக்கிறார் அனில் ரவிபுடி. இப்படத்திற்கான படப்பிடிப்பை விரைவாக முடித்து அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது சிரஞ்சீவியின் 157-வது திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது.

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு நயன்தாரா கமிட்டாகியிருக்கிறார். நயன்தாரா படத்தில் நடிக்கும் தகவலை ஒரு நகைச்சுவையான புரொமோ வீடியோ மூலமாக அறிவித்திருக்கிறார்கள்.

அந்தக் காணொளியில், நயன்தாரா சிரஞ்சீவியின் ஹிட் பாடல்களுக்கு வைப்ஸ் செய்வது போலவும், சிரஞ்சீவியின் ஐகானிக் வசனத்தைப் பேசுவது போலவும் காட்டியிருக்கிறார்கள்.

சிரஞ்சீவியுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இதற்கு முன், 'சைரா நரசிம்ஹா ரெட்டி', 'காட்பாதர்' ஆகிய திரைப்படங்களில் நயன்தாரா நடித்திருந்தார்.

சிரஞ்சீவி நடித்திருக்கும் 'விஸ்வம்பரா' திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இதை தாண்டி அவர் 'தசரா' படத்தின் இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

"அந்த நேர்மைதான் இந்த கதாபாத்திரத்துக்குத் தேவை!" - விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகராகும் பால் டப்பா

ரேப் இசையில் தற்போது மாஸ் காட்டி வருகிறார் பால் டப்பா. இவருடைய உண்மையான பெயர் அனிஷ்.சுயாதீன பாடல்கள் மூலமாக தன்னுடைய இசைப் பயணத்தைத் தொடங்கியவர் 'துருவ நட்சத்திரம்' படத்தில் 'His name is John' பாடலைப்... மேலும் பார்க்க

GBU - இளையராஜா விவகாரம்: "ஜி.வி.பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு இதான் பிரச்னை" - தேனப்பன்

அஜித் குமார் நடித்திருந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகியிருந்தது. இப்படத்தில் அஜித்தின் சில மாஸ் காட்சிகளுக்கு இளையராஜாவின் சில பாடல்களைப் பயன்படுத்தியிருந்தனர்.அந்தப் ... மேலும் பார்க்க

"மதுரை ரொம்ப பிடிக்கும்" - மீனாட்சி அம்மன் கோயிலில் விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி தரிசனம் | Photo Album

நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகை ஐஸ்வர்ய... மேலும் பார்க்க

Vishal: "இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது; காரணம்..." - நடிகர் விஷால் சொல்வது என்ன?

நடிகர் விஷால் நடித்திருந்த 'மதகஜராஜா' திரைப்படம் இந்தாண்டின் தொடக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படங்களின் லைன் அப்களை அவர் அறிவித்திருந்தாலும் ... மேலும் பார்க்க

"உன் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் டார்லிங்" - விஜய் சேதுபதியைச் சந்தித்துக் குறித்து விஷால்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கிற 'ஏஸ்' திரைப்படம் இம்மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ருக்மிணி வசந்த், யோகி பாபு ஆகியோர் முக்க... மேலும் பார்க்க