செய்திகள் :

"உன் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் டார்லிங்" - விஜய் சேதுபதியைச் சந்தித்துக் குறித்து விஷால்

post image

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கிற 'ஏஸ்' திரைப்படம் இம்மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ருக்மிணி வசந்த், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

ருக்மிணி வசந்த் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

‘ஏஸ்' படத்தில்...
‘ஏஸ்' படத்தில்...

படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் விஜய் சேதுபதி.

சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஷாலும் விஜய் சேதுபதியும் சந்தித்திருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்பு குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார் விஷால்.

இந்தப் பதிவில் அவர், "சென்னை விமான நிலையத்தில் என் அன்பு நண்பர், பன்முக நடிகர் விஜய் சேதுபதியைச் சந்தித்தேன்.

அவரைப் பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சி. அவர் எப்போதும் ஆற்றல் நிறைந்தவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன்.

சில நிமிடங்கள் மட்டுமே பேசியிருந்தாலும், அவருடன் உரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

உனது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் டார்லிங். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். விரைவில் மீண்டும் சந்திக்க ஆவலாக உள்ளேன்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

இப்படத்தைத் தாண்டி விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'ட்ரெயின்', 'தலைவன் தலைவி' ஆகிய திரைப்படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இயக்குநர் பூரி இயக்கத்திலும் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

GBU - இளையராஜா விவகாரம்: "ஜி.வி.பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு இதான் பிரச்னை" - தேனப்பன்

அஜித் குமார் நடித்திருந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகியிருந்தது. இப்படத்தில் அஜித்தின் சில மாஸ் காட்சிகளுக்கு இளையராஜாவின் சில பாடல்களைப் பயன்படுத்தியிருந்தனர்.அந்தப் ... மேலும் பார்க்க

Nayanthara: மூன்றாவது முறையாக சிரஞ்சீவியுடன் இணையும் நயன்தாரா - வெளியான அப்டேட்

டோலிவுட் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்த 'சங்கராந்தி வஸ்துனம்' திரைப்படம் அதிரடி என்டர்டெயினராக ஹிட் அடித்திருந்தது. அப்படத்தில் வெங்கடேஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், மீன... மேலும் பார்க்க

"மதுரை ரொம்ப பிடிக்கும்" - மீனாட்சி அம்மன் கோயிலில் விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி தரிசனம் | Photo Album

நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால்நடிகர் விஷால் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகை ஐஸ்வர்ய... மேலும் பார்க்க

Vishal: "இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது; காரணம்..." - நடிகர் விஷால் சொல்வது என்ன?

நடிகர் விஷால் நடித்திருந்த 'மதகஜராஜா' திரைப்படம் இந்தாண்டின் தொடக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படங்களின் லைன் அப்களை அவர் அறிவித்திருந்தாலும் ... மேலும் பார்க்க

"வீட்டுல இருந்து ஓடி வந்ததுக்குப் பிறகு என்னை வெறுத்துட்டாங்க!" - முனீஷ்காந்தின் அறியாத பக்கங்கள்!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளங்கள் இருக்கும். அப்படி காமெடி நடிகர்களின் தனித்த அடையாளங்களைத் தனியாக லிஸ்ட் செய்யலாம். காமெடி நடிகர்களில் சிலர் காமெடி பக்கத்தைத் தாண்டி ... மேலும் பார்க்க