ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!
ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தம்? டிரம்ப் மத்தியஸ்தம்!
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர், 1,179-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபடவிருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
போரை நிறுத்தும் முயற்சியாக, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் டிரம்ப் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமையில் (மே 19) விவாதிக்கவிருப்பதாக ரஷிய ராணுவத் தலைமையகம் தெரிவித்தது. தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியுடனும் டிரம்ப் பேசவுள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பதற்கு அமெரிக்காதான் காரணமாக இருக்கும்நிலையில், காரணமானவரே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது வேடிக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்தியா - பாகிஸ்தான் போரை மத்தியஸ்தம் செய்துவைத்ததாக பொய்யான தம்பட்டம் கூறி வரும்நிலையில், தற்போது உக்ரைன் போருக்கும் தற்பெருமை சூடவுள்ளாரா டிரம்ப்? என்றும் விமர்சனங்கள் பரவி வருகின்றன.
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான 3 ஆண்டுகளுக்கும் மேலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா உள்பட வேறுசில நாடுகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. மே 15 ஆம் தேதியில், துருக்கியில் ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த, இருநாட்டு பிரதிநிதிகளும் முதன்முறையாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிவடைந்தது. இதனிடையே, சனிக்கிழமையில் உக்ரைன் மீது ரஷியா, இதுவரையில் இல்லாத அளவில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதலையும் நடத்தியது.
இதையும் படிக்க:யூடியூபரா? பாகிஸ்தான் உளவாளியா? யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?