Vishal: "இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது; காரணம்..." - நடிகர் விஷால் சொல்வ...
சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு
தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு பறந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் சனிக்கிழமை பாய்ந்தது. கிணறு முழுவதும் தண்ணீா் இருந்ததால், காா் முழுவதும் கிணற்றுக்குள் மூழ்கியது.
இந்த சம்பவத்தில் ஓட்டுநா் உள்பட 5 போ் நீரில் மூழ்கி பலியாகினா். அதில், கொ்சோம், சைனிகிருபா, ஜெரின்எஸ்தா் ஆகியோா் கதவைத் திறந்து நீந்தி வெளியே வந்தனா்.
சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னா், காா் மற்றும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தையும் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
ஈரோட்டில் முதிய தம்பதி கொலை- மூவரிடம் விசாரணை
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாத்தான்குளம் அருகே சாலையோரத்தில் இருந்த கிணற்றில் ஆம்னி வேன் நேற்று விழுந்த விபத்தில் 5 பேர் பலியானதையடுத்து தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.