GBU - இளையராஜா விவகாரம்: "ஜி.வி.பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு இதான் ...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக 3-வது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று(மே 17) காலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,479 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீரானது, இன்று(மே 18) காலை விநாடிக்கு 4764 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் திறப்பைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.
நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை 108. 31 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 108. 52. அடியாக சற்று உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 76.32 டிஎம்சியாக உள்ளது. மேட்டூரில் பெய்த மழை அளவு 55.40 மி.மீ. ஆகும்.
இதையும் படிக்க: வால்பாறையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்!