செய்திகள் :

பெரம்பலூர்: வீட்டு ரசீது வழங்க ரூ.25,000 லஞ்சம்; நகராட்சி வருவாய் ஆய்வாளர் சிக்கிய எப்படி?

post image

பெரம்பலூர், ஆலம்பாடி ரோடு அன்பு நகரைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி மகேஸ்வரி. இவர், தற்போது பெரம்பலூர் நகர்ப்பகுதியில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார்.

அந்த வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்காக மகேஸ்வரி தனது உறவினரான பெரம்பலூர் சங்குப்பேட்டையைச் சேர்ந்த மெய்யன் என்பவர் மூலம் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், சின்ன அய்யன் வயல் பகுதியைச் சேர்ந்த 53 வயதாகும் கண்ணன் என்பவர் பெரம்பலூர் நகராட்சி வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

இவர், தற்போது பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தின் பின்புறத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், பெரம்பலூர் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணன் மெய்யனிடம் வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்காக ரூ.25,000 லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத மெய்யன், இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கொடுத்த அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.25,000 கண்ணனிடம் கொடுக்கப்பட்டது.

arrest

அதன்படி, மெய்யன் தனது வீட்டில் பணத்துடன் இருந்தார். லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரும் அவரது வீட்டின் அருகே ரகசியமாகக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அப்போது, மெய்யன் வீட்டிற்கு வந்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணன், மெய்யனிடம் இருந்து ரூ. 25,000 லஞ்சப் பணத்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் விரைந்து சென்று கண்ணனைக் கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

மேலும், அவரது அலுவலகத்திலும் போலீஸார் சோதனை நடத்தினர்.

புது வீட்டுக்கு ரசீது போடுவதற்காக ரூ. 25,000 லஞ்சம் கேட்டு நகராட்சி வருவாய் ஆய்வாளர் கைதாகியுள்ள சம்பவம், பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Scam Alert: ஆன்லைன் ஆர்டர் டெலிவரி அட்டைப்பெட்டியை வைத்து பணமோசடி; பகீர் பின்னணியும் தற்காப்பும்

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த மோசடி இப்போது பரவலாகிவிட்டது.`கார்டு மேலே இருக்கும் 16 நம்பர் சொல்லு...' `உன் பேங்க் அக்கவுண்ட் லாக் ஆயிடுச்சி' என அறைகுறை தமிழில் பேசியவர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்... மேலும் பார்க்க

கரூர்: சுற்றுலா வாகனம் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து; 5 பேர் பலி; நிவாரணம் அறிவித்த முதல்வர்

கரூர், செம்மடை அருகே கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனில் ஏறி இறங்கியது. இதில் எதிரில் வந்த சுற்றுலா வாகனத்தில் (... மேலும் பார்க்க

கரூர்: கம்பி வேலியைத் தொட்ட ஆசிரியை மின்சாரம் தாக்கி பலி; உறவினர்கள் போராட்டம்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மகாதானபுரம் தீர்த்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி மனைவி சரஸ்வதி (வயது: 55).இவர், மாயனூரில் உள்ள டான்செம் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், தனத... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: உயிரோடு குழந்தையைப் புதைக்க முயன்ற குடும்பம்; கடைசி நிமிடத்தில் மீட்ட போலீஸ்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள பனையப்பட்டி உதயசூரியபுரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா (வயது: 21).இவர், இலுப்பூர் மதர்தெரசா நர்சிங கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில்,... மேலும் பார்க்க

கும்பகோணம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான 4 பேரின் விவரங்களை மறைக்கிறதா போலீஸ்?

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.அதே கடையில் குடவாசல் மேட்டு தெருவைச் சேர்ந்த சண்முக பிரபு (2... மேலும் பார்க்க

``மீட்டு தந்தது போலி..'' - ரூ.23 கோடி மதிப்புள்ள வைரக்கல் வழக்கில் வியாபாரி புகார்; திடீர் திருப்பம்

சென்னை அண்ணாநகர், பி பிளாக், 17-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (69). இவர், வைர கல், நகைகளை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகரின் நண்பர் சுப்பிரமண... மேலும் பார்க்க