செய்திகள் :

இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

post image

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக இருந்தபோது அவருடைய மக்கள் தொடர்பு இயக்குநராக பணியாற்றியவர் துசிதா ஹல்லுவா. இவர் தனது வழக்கறிஞருடன் வாகனத்தில் சனிக்கிழமை இரவு கொழும்பின் புறநகர்ப் பகுதியான நாரஹென்பிடவுக்கு சென்றிருக்கிறார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழி மறித்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தொடர்ந்து ஹல்லுவா மற்றும் அவருடன் வந்த நபர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

துப்பாக்கிச் சூட்டில் வாகனம் சேதமடைந்தது. மேலும் மர்ம நபர்கள் ஹல்லுவா வசம் இருந்த ரகசிய கோப்பு ஒன்றையும் திருடிச் சென்றனர். இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் அதிபர் அநுர குமார திசநாயகவுக்கு எதிராக அவதூறான அறிக்கை விவகாரத்தில் ஹல்லுவாவை சிஐடி விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய போப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்பது யார்?

புதிய போப் பதினான்காம் லியோ பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் நாலாகாந்து துணை முதல்வர் யாந்துங்கோ பாட்டனும் கலந்... மேலும் பார்க்க

சசி தரூரைச் சுற்றி நகரும் அரசியல்! கேரள காங். சொல்வதென்ன?

மத்திய அரசு நியமித்துள்ள எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இணைக்கப்பட்டுள்ளதில் காங்கிரஸ் தலைமைக்கு விருப்பமில்லையா? என்று தேசிய அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.வெளிநாடுகளுக்... மேலும் பார்க்க

துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் ரத்து!

துருக்கியில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக மும்பை ஐஐடி தெரிவித்துள்ளது. இதில், மும்பை ஐஐடியில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்றத் திட்டங்கள், எதிர்கால மேம்பா... மேலும் பார்க்க

துருக்கி ஆப்பிள்களை மக்களும் புறக்கணிக்கின்றனரா?

துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை மக்கள் விரும்புவதில்லை என பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், துருக்கி ஆப்பிள்களை புறக்கணிக்க வியாபாரிகள் முடிவு... மேலும் பார்க்க

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.நாளை(மே 19) அவர் விமானம் மூலம் ஐரோப்பா செல்லும் அவர் மேற்கண்ட 3 நாட்டு தலைவர்களுடன்... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விரைவில் ஆலோசனை!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெள... மேலும் பார்க்க