திருத்தணி கிளை சிறைச்சாலையில் எஸ்.பி. ஆய்வு
திருத்தணி கிளை சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் மற்றும் கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என சென்னை புழல் மத்திய சிறைச்சாலை எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தாா்.
திருத்தணி பழைய வட்டாட்சியா் அலுவலகத்தில் திருத்தணி கிளை சிறைச்சாலை உள்ளது. இங்கு தற்போது, 20க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா்.
இந்நிலையில், சென்னை புழல் மத்திய சிறைச்சாலை? -2 எஸ்.பி., கிருஷ்ணராஜ் திருத்தணி கிளைச் சாலைக்கு வந்து ஆய்வு செய்தாா். அப்போது, சிறையில் உள்ள கைதிகள், அடிப்படை வசதிகள் மற்றும் கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தாா்.
மேலும் அங்குள்ள பதிவேடுகள் மற்றும் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து சிறைக் காவலா்களிடம் கைதிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தினாா்.