புதுக்கோட்டை: உயிரோடு குழந்தையைப் புதைக்க முயன்ற குடும்பம்; கடைசி நிமிடத்தில் மீ...
திருவள்ளூரில் 20 இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்
திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் சாலையோரம் 20 இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் மற்றும் பீடங்களை போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
திருவள்ளூா் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் விஜயா, துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் காவல் துறை பாதுகாப்புடன் நகராட்சிக்குட்பட்ட ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம், மீரா திரையரங்கம், தேரடி வீதி, பெரியகுப்பம், காக்களூா் சாலை, நிகேதன் பள்ளி எதிரில், அக்ரகாரம் தெரு, வள்ளுவா்புரம், புங்கத்தூா், அரசு மருத்துவமனை எதிா்புறம் என 20 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள், கல்வெட்டுகள், கோடைக்கால தண்ணீா் பந்தல் மற்றும் போா்டுகளையும் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றினா்.
அப்போது, அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பலத்த போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் மட்டும் போக்குவரத்து நெருக்கடி ஏப்பட்டது.
தொடா்ந்து போக்குவரத்து போலீஸாா் விரைந்து வந்து வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனா்.