செய்திகள் :

Doctor Vikatan: ஜலதோஷத்துக்குப் பிறகு நிரந்தரமாக மாறிப்போன குரல்.. பழையபடி மாறுமா?

post image

Doctor Vikatan: நான் 70 வயதுப் பெண். எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜலதோஷம் பிடித்திருந்தது. தொண்டைக்கட்டும் இருந்தது. அதன் பிறகு இதுவரை என் தொண்டைக்கட்டு சரியாகவில்லை. வழக்கமான குரல் மாறி, கரகரப்பாகவே பேசிக்கொண்டிருக்கிறேன். கூகுள் செய்து பார்த்ததில் acute laryngitis பிரச்னையாக இருக்கும் என்று வந்தது. அப்படியென்றால் என்ன? என் குரல் பழையபடி மாற வாய்ப்பில்லையா... எனக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அவசியம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

மூன்று வாரங்களுக்கும் மேலாக குரல் மாற்றம் தொடர்கிறது என்றால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. உங்களுடைய வயது 70 என்கிறீர்கள். அதையும் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டும். 

உங்களுடைய குரல் மாற்றத்துக்கு பல காரணங்கள் இருக்கலாம். குரல்வளையில் ஏற்பட்ட வீக்கம் ஒரு காரணமாக இருக்கலாம். குரல் வளையில் பலவீனம் ஏற்பட்டிருக்கலாம்.

எனவே, முதலில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை நேரில் அணுகுங்கள். அவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, தேவைப்பட்டால் வீடியோ லாரிங்கோஸ்கோப்பி (video laryngoscopy ) டெஸ்ட்டை செய்து பார்ப்பார். அந்தப் பரிசோதனையில் குரல்வளையின் தன்மையையும் அது இயங்கும் விதத்தையும் முழுமையாகப் பார்க்க முடியும்.

உங்களைப் பரிசோதித்துவிட்டு, தேவைப்பட்டால் வீடியோ லாரிங்கோஸ்கோப்பி (video laryngoscopy ) டெஸ்ட்டை செய்து பார்ப்பார்.

உங்கள் பிரச்னையின் அறிகுறிகளை வைத்து நீங்களாக கூகுள் செய்து, அதில் வரும் தகவல்களை அப்படியே நம்பவோ, பின்பற்றவோ வேண்டாம். நீங்கள் தெரிந்துகொண்ட 'அக்யூட் லாரிங்கைட்டிஸ்' (acute laryngitis ) பிரச்னையானது ஒருவகையான இன்ஃபெக்ஷன். அது தானாகவே குணமாகக்கூடியது.

ஆனால், உங்களுக்கு வந்திருப்பது அதுதானா என்பதை மருத்துவர்தான் உறுதிசெய்ய வேண்டும். உங்கள் விஷயத்தில் 3 வாரங்களுக்கும் மேலாக குரல் மாற்ற பிரச்னை இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதால், வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். சரியாக கவனிக்காமல் விட்டால் இது புற்றுநோய் ஆபத்தில்கூட கொண்டுவிடலாம். அதற்காக உடனே பயப்படாதீர்கள். ஆண்களிடம்தான் அந்த ரிஸ்க் அதிகம். நம் நாட்டில் பெண்களுக்கு அந்த ரிஸ்க் குறைவுதான். ஆனாலும், நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

NEP: ``கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதுதான் ஒரே வழி..'' - முதல்வர் ஸ்டாலின்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

NEP: `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' - அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்... மேலும் பார்க்க

``எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' - கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி வருகிறது மாநகராட்சி. இதில் கொடுங்கையூரில் மலை போல் குவிந்து வரும் குப்பைகளை எரித்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க... மேலும் பார்க்க

புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கும்? | Explained

'ரஷ்யா - உக்ரைன் போர் நிற்கப்போகிறதா?', 'புதினும், ஜெலன்ஸ்கியும் நேரில் சந்தித்து கொள்ளப்போகிறார்களா?' என்கிற எதிர்பார்ப்புகளை கிளப்பிய ரஷ்யா - உக்ரைன் நாடுகளின் சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது. ஆன... மேலும் பார்க்க

சவுதி அரேபியா: ட்ரம்ப்பை வரவேற்று `அல்-அய்யாலா' நடனம்; வைரலாகும் காட்சிகள்.. பின்னணி என்ன?

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனவரி மாதம் பதவியேற்றுக் கொண்டார். டிரம்ப்பின் இந்த 2.0 ஆட்சி முறை இதுவரை இல்லாத அளவிற்கு வேறொரு அதிரடி கோணத்தில் இருக்கும் என்று கணித்து போன்ற... மேலும் பார்க்க

ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்தில் `கோவிட் -19' அதிகரிப்பு - இந்தியாவுக்கு பாதிப்பு உள்ளதா?

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சில... மேலும் பார்க்க