பெரம்பலூர்: வீட்டு ரசீது வழங்க ரூ.25,000 லஞ்சம்; நகராட்சி வருவாய் ஆய்வாளர் சிக்க...
எனக்கு நிறைய வேலை இருக்கு... விஜய்யின் அரசியல் கேள்விக்கு சூரி பதில்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தொடர்பான கேள்விக்கு சூரி பதிலளித்துள்ளார்.
நடிகர் சூரி இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் கூட்டணியில் உருவான மாமன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சூரியிடம், “நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ளார். அவர் அழைத்தால் பிரசாத்திற்குச் செல்வீர்களா?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, சூரி, “எனக்கு நிறைய திரைப்பட வேலைகள் இருக்கிறது. அதைப் பார்க்க வேண்டும். என்னோடு உங்களை திடீரென அழைத்தால் நீங்கள் வருவீர்களா? நடிகர் விஜய் சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறார். என் வேலையை நான் பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: விஜய் சேதுபதி - விஷால் திடீர் சந்திப்பு!