ஊட்டி: 'புரோக்கோலி ரூ. 250; சுக்குனி ரூ. 85' - எகிறும் சைனீஸ் காய்கறிகளின் வி...
தமிழ் - தெலுங்கில் உருவாகும் மணிரத்னம் புதிய படம்!
இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தக் லைஃப் படத்திற்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னம் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியை கதாநாயகனாக வைத்து காதல் கதை ஒன்றை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் நவீன் பொலிஷெட்டி தெலுங்கில் ஜதி ரத்னலு, ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ஆகிய வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானார்.
தக் லைஃப் படம் வெளியானதும் நவீன் பொலிஷெட்டி நடிக்கவுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நவீன காதல் கதையாக உருவாகும் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளதாகவும் நாயகியாக நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்.
இதையும் படிக்க: அடுத்தப்பட வாய்ப்புக்கு புகழ் தேவைப்படுகிறது: ஐஸ்வர்யா லட்சுமி