செய்திகள் :

இது நடந்தால் யாருமே பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெற முடியாது..! அதிகரிக்கும் சுவாரசியங்கள்!

post image

ஐபிஎல் 2025 போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. போர்ப் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட போட்டிகள் நேற்று (மே.17) முதல் தொடங்கப்பட்டன.

மழையின் காரணமாக ஆர்சிபி, கேகேஆர் போட்டிகள் கைவிடப்பட்டது. இதனால், நடப்பு சாம்பியன் கேகேஆர் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. ஆர்சிபி அடுத்த சுற்றுக்கான விளிம்பில் இருக்கிறது.

இதுவரை 58 போட்டிகள் முடிவடைந்தும் இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றும் குறிப்பிட்ட 2 அணிகள் வென்றால் யாருமே பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெற முடியாது என்பது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதியம் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் அணியும், இரவு தில்லி- குஜராத் அணிகள் மோதுகின்றன.

இந்த வாய்ப்புகள் குறித்து ஸ்டார்ஸ்போர்ட்ஸ் இந்தியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

1. ராஜஸ்தான் பஞ்சாபை வென்றால்... ஆர்சிபி தகுதிபெறும்.

2. குஜராத் தில்லியை வென்றால்... குஜராத், ஆர்சிபி தகுதிபெறும்.

3. பஞ்சாப், குஜராத் வென்றால்... பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் தகுதிபெறும்.

4. பஞ்சாப், தில்லி வென்றால்... எந்த அணியும் தகுதிபெற முடியாது.

டு பிளெஸ்ஸியைப் போலவே பேட்டிங் செய்த சிராஜ்..! வைரலாகும் விடியோ!

குஜராத் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி போலவே பேட்டிங் செய்த சிராஜ் விடியோ வைரலாகி வருகிறது.ஐபிஎல் 18-ஆவது சீசனில் 58 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெறவில்லை. இருப்பினும்... மேலும் பார்க்க

விராட் கோலிக்காக சின்னசாமி திடலை வெண்மையாக்கிய ரசிகர்கள் ஏமாற்றம்!

பெங்களூரு ரசிகர்களின் நெகிழ்ச்சியான செயல் குறித்து ஐபிஎல் நிர்வாகம் விடியோ வெளியிட்டுள்ளது.ஐபிஎல் 58-ஆவது போட்டி நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி திடலில் ஆர்சிபி-கேகேஆர் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது.... மேலும் பார்க்க

ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்லும்: நானும் உடனிருப்பேன் -ஏபி டி வில்லியர்ஸ்

ஐபிஎல் கோப்பையை விராட் கோலியுடன் கைகோர்த்து தூக்குவேன் என்று ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானுடனான தீவிர போர்ப் பதற்றத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட... மேலும் பார்க்க

ஆர்சிபி - கேகேஆர் இடையேயான போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம்!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயான போட்டிக்கு மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்த டு பிளெஸ்ஸிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!

ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் போட்டிகளில் விளையாடுவதற்காக டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக தற்காலிக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இல் அடுத்த 10 நாள்கள் மிகவும் முக்கியமானவை..! முன்னாள் வீரர் பேட்டி!

பிளே ஆஃப்ஸுக்கான போராட்டம் தீவிரமடைவது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 சீசன் மீண்டும்... மேலும் பார்க்க