செய்திகள் :

ஒப்பந்ததாரரைப் பார்த்து அரிவாளை ஓங்கினாரா திமுக முன்னாள் எம்எல்ஏ? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் நகரில் தீயணைப்புத் துறைக்குப் புதிய கட்டிடம் ரூ 2,50,00,000 மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

இந்தப் பூமி பூஜையை அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள், தி.மு.க கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த நிகழ்வில் தனக்கு முறையான அழைப்பு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனக் கூறி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம் தேங்காய் உடைக்கும் போது தகராறு செய்தார்.

uthayam sanmugam
uthayam sanmugam

அப்போது, அங்கிருந்த ஒப்பந்ததாரர் எதோ சொல்ல, ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் நின்ற பக்கம் அரிவாளைத் தூக்கிக் காண்பித்து ஆவேசப்பட்டார்.

இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு உதயம் சண்முகம் அங்கிருந்த சாமியான பந்தல் அருகே செல்ல, அங்கு வந்த ஒருவருடன் வாக்குவாதம் செய்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் ஒப்பந்ததாரரைப் பார்த்து அரிவாளைக் காட்டி மிரட்டியதாகச் சொல்லப்படும் சம்பவம், புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`ED ரெய்டை திசை திருப்புகிறார்கள்' - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறைறையினர் எட்டுமணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினார்கள்.ஆர்.பி.உதயகுமார்அப்போது அங்கு கட்சி நிர்வாக... மேலும் பார்க்க

சசி தரூர் விவகாரம்; `பாஜக அரசு சிறப்பாக நாரதர் முனி அரசியலைச் செய்கிறது' - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் இந்திய அரசு அனைத்துக்கட்சிகளின் குழு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அதற்காக 7 கட்சிகளின் எம்.பி... மேலும் பார்க்க

'இதை அரசியலாகப் பார்க்கவில்லை' வெளிநாடு செல்லும் குழுவில் இடம்பெற்றது பற்றி சசிதரூர் எம்.பி கருத்து

7 எம்.பி-க்கள் அடங்கிய குழு:ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக அடுத்த வாரம் அனைத்துக்கட்சி குழு புறப்படுகிறது. அதற்காக அனைத்து கட்சிகளைச் சேர்ந்த ஏழு எம... மேலும் பார்க்க

"யார் அந்த தம்பி? ரத்தீஷ் எங்கே? ED ரெய்டுகள் பற்றி ஸ்டாலின் மவுனம் ஏன்?" - அதிமுக கேள்வி

அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முந்தினம் (மே 16), டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் (MD) விசாகன் ஐ.ஏ.எஸ் வீட்டுக்குள் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதோடு, மேலும் விசாரணைக்கு விசாகனனை தங்... மேலும் பார்க்க