செய்திகள் :

நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

post image

ஹைதராபாதில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.

ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே ஸ்ரீகிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்து மேல்தளங்களுக்கும் தீ பரவியது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு மொகல்புரா, கௌலிகுடா நிலையங்களிலிருந்து 11 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். கட்டடத்தின் பெரும்பாலான பகுதியை தீ ஆக்கிரமித்ததால், மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, அருகிலிருந்த வேறொரு கட்டடத்திலிருந்து, தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை அடையும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு, உள்ளே சென்றனர்.

இருப்பினும், மேல்தளங்களில் தீ பரவியதால், தீயில் சிக்கியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் குழந்தைகள் 8 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எல்லா வகையிலும் உதவ முன்வருவதாகவும் கூறினார்.

இதனிடையே, சம்பவ இடத்தை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆய்வு செய்தார்.

யூடியூபரா? பாகிஸ்தான் உளவாளியா? யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வருகிற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு! 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட்... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரு... மேலும் பார்க்க

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும் -ஜோதிராதித்ய சிந்தியா

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா். உலக தொலைத்... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வி!

3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க