செய்திகள் :

அடுத்தப்பட வாய்ப்புக்கு புகழ் தேவைப்படுகிறது: ஐஸ்வர்யா லட்சுமி

post image

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சினிமாவில் புகழோடு இருப்பது குறித்து பேசியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழிலும் நல்ல நடிகையாக உருவெடுத்துள்ளார். கதையம்சமுள்ள தமிழ்ப் படங்களில் இயக்குநர்களின் தேர்வுப்பட்டியலில் ஐஸ்வர்யா முக்கியமான இடத்திலேயே இருக்கிறார்.

இவர் நடித்த மாமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது. அடுத்ததாக, இவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம் வெளியாகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, “நான் மருத்துவராக இருந்து திரைத்துறைக்கு வந்தேன். கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவப் பயிற்சி செய்யாததால் இப்போது என்னை டாக்டர் என அழைக்கக்கூடாது. சினிமாவில் நிறைய சம்பாதிக்கலாம், புகழ் கிடைக்கும் என பலரும் நினைக்கின்றனர். பணத்தேவை ஒருவரின் தேவையைப் பொறுத்துதான். ஆனால், எனக்கு அடுத்தப்படம் அமைய வேண்டும் என்றால் புகழைத் தக்க வைக்க வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது.

எவ்வளவு பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள் என்பதைப் பொறுத்தே நடிகைகளுக்கு வாய்ப்புகள் வருகின்றன. அதனால், மார்க்கெட்டிங், அடிக்கடி நல்ல ஆடைகளில் புகைப்படங்களை வெளியிடுதல் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டியுள்ளது. மருத்துவர் தினமும் பயிற்சி செய்வதுபோல் நடிகர்களும் பணியாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். சோம்பேறியாக மாறினால் அவ்வளவுதான்.” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: எனக்கு நிறைய வேலை இருக்கு... விஜய்யின் அரசியல் கேள்விக்கு சூரி பதில்!

வாடிவாசல் எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பல்ல: வெற்றி மாறன்

வாடிவாசல் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு இயக்குநர் வெற்றி மாறன் பதிலளித்துள்ளார். நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. மறைந்த எழுத்தாளர் சி.ச... மேலும் பார்க்க

விக்ரம் டிரைலர் சாதனையை முறியடித்த தக் லைஃப் டிரைலர்!

தக் லைஃப் திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது. நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் டிரைலர் நேற்று (மே. 17) வெளியானது.இந்த டிரைலரில் த... மேலும் பார்க்க

மண்டோதரியாக காஜல் அகர்வால்!

ராமாயணம் திரைப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'பவால்’, ‘சிச்சோரே’ ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, தற்போது ராமாயணம் படத்தை இயக்கிவருகிறார... மேலும் பார்க்க

லீக் 1 தொடர்: 13-ஆவது முறையாக சாம்பியனான பிஎஸ்ஜி!

லீக் 1 கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.பாரிஸ் செயின்ட் ஜெர்மன் எனப்படும் பிஎஸ்ஜி கால்பந்து அணி லீக் 1 கால்பந்து தொடரின் கடைசி போட்டியில் ஆக்செர்ரே உடன் மோதியது. இந்தப் போட்டிய... மேலும் பார்க்க

துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு

திரைப்பட படப்பிடிப்புகளைத் துருக்கி, அஜர் பைஜானில் நடத்த வேண்டாம் என இந்தியத் திரைப்பட அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. இதனால், எல... மேலும் பார்க்க

தமிழ் - தெலுங்கில் உருவாகும் மணிரத்னம் புதிய படம்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.தக் லைஃப் படத்திற்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னம் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியை கதாநாயகனாக வைத்து காதல் கதை ஒன்றை... மேலும் பார்க்க