பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்கிறது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் பலத்த இடியுடன் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், 2 ஆவது நாளாக சனிக்கிழமை மாலை 6 மணி முதல் பெரம்பலூா், அரும்பாவூா், வேப்பந்தட்டை உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இரவு வரை பெய்த மழையால் சாலைகளிலும், கழிவுநீா் கால்வாய்களிலும் தண்ணீா் பெருக்கெடுத்தோடியது.