Lijomol : `அம்மா மறுமணம் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை; ஆனால்..!' - லிஜோமோ...
லஞ்சம் வாங்கி கைதான நகராட்சி வருவாய் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, பெரம்பலூா் நகராட்சி வருவாய் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, நகராட்சி ஆணையா் ராமா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
பெரம்பலூா் -ஆலம்பாடி சாலையிலுள்ள அன்பு நகரில் வசித்து வருபவா் முத்துசாமி மனைவி மகேஸ்வரி. இவா், அதே பகுதியில் புதிதாக கட்டி முடித்துள்ள வீட்டுக்கு, வீட்டு வரி ரசீது செலுத்துவதற்காக பெரம்பலூா் நகராட்சியில் விண்ணப்பித்தாா். அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நகராட்சி வருவாய் ஆய்வாளா் கண்ணன் (53), மகேஸ்வரியிடம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத மகேஸ்வரி, தனது உறவினரான பெரம்பலூா் சங்குப்பேட்டை அருகே வசிக்கும் மெய்யன் (59) என்பவரிடம் கூறியுள்ளாா்.
இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் மெய்யன் அளித்த புகாரின்பேரில், வருவாய் ஆய்வாளா் கண்ணன் சங்குப் பேட்டையில் உள்ள மெய்யன் வீட்டில் வெள்ளிக்கிழமை லஞ்சம் வாங்கியபோது போலீஸாா் கைது செய்தனா்.
தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கண்ணனை போலீஸாா் சிறையில் அடைத்தனா். இந் நிலையில், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கண்ணனை பணியிடை நீக்கம் செய்து, பெரம்பலூா் நகராட்சி ஆணையா் ராமா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.