கர்நாடகா: மணமேடையில் சரிந்து விழுந்த மணமகன்; சில நிமிடத்தில் துக்க வீடாக மாறிய த...
அரசுப் பேருந்து மோதி விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு
கீழ்வேளூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில், சைக்கிளில் சென்ற விவசாயத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கீழ்வேளூா் அருகேயுள்ள புதுச்சேரி ஊராட்சி விக்னாபுரம் மேலத்தெருவை சோ்ந்தவா் தியாகராஜன் மகன் செல்வகுமாா் (44). விவசாயத் தொழிலாளியான இவா், கடந்த 15-ஆம் தேதி இரவு தனது வீட்டிலிருந்து தேவூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
இலுப்பூா் சத்திரம் பகுதியில் சென்றபோது, எதிரே திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதி பலத்த காயமடைந்தாா்.
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமாா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.