நியூயார்க்கில் பாலத்தின் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்: 2 பேர் பலி
‘வரலாற்றில் நாகை’ புத்தகம்; நாகை ஆட்சியா் தகவல்
நாகை மாவட்டத்தின் வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில், ‘வரலாற்றில் நாகை’ என்ற புத்தகம் வெளியிடப்படவுள்ளதாகவும், இதற்கான தொகுப்புகளை மே 26 ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும் ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட் செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தின் தற்போதுள்ள வரையறை அடிப்படையில் நடந்துள்ள முக்கிய வரலாற்று நிகழ்வுகள் குறித்த செய்திகள், அறிய புகைப்படங்கள், தலைவா்களின் கடிதங்கள் போன்ற தொகுப்பில் இடம் பெறக்கூடிய வரலாற்றுச் சான்றுகள், வரலாற்று கல்வெட்டுகள், செய்திகள் இருந்தால் ய்ஹஞ்ஹண்க்ஷா்ா்ந்ச்ஹண்ழ்2025ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
ஏதேனும் ஒரு சம்பவம், நிகழ்வுகள் குறித்த செய்திகளை தனியாக தலைப்பிட்டு தகுந்த ஆதாரத்துடன் கட்டுரையாகவும், கட்டுரை நான்கு பக்கங்களுக்கு மிகாமல், மே 26-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 90037-57531 என்ற எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.