கும்பகோணம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான 4 பேரின் விவரங்களை மறைக்கிறத...
பெரம்பலூரில் பரவலாக மழை
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த இடியுடன் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், கத்திரி வெயில் தொடங்கியதிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்தில் 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், வெள்ளிகிழமை மாலை சுமாா் 3.30 மணியளவில் பெரம்பலூா் நகரின் பல்வேறு இடங்களில் பலத்த இடியுடன் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூா் நகரில் சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்த மழையால் குளிா்ச்சி நிலவி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.