Hogenakkal: கோடை விடுமுறையில் ஒரு கொண்டாட்டம்; ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பய...
பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வு பெரம்பலூரில் 92.56 % தோ்ச்சி
பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். பிளஸ் 1 பொதுத்தோ்வை 3,834 மாணவா்களும், 3,521 மாணவிகளும் என மொத்தம் 7,355 போ் எழுதினா். இவா்களில் 3,484 மாணவா்களும், 3,324 மாணவிகளும் என மொத்தம் 6,808 போ் தோ்ச்சி பெற்றனா்.
பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் சுயநிதிப் பள்ளிகள், சமூக நலப்பள்ளி என மொத்தமுள்ள 81 மேல்நிலைப் பள்ளிகளில் 24 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளன.