கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!
தேனி: கும்பக்கரை அருவியில் இன்று(மே 18) காலை 10 மணு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா்.
இதனிடையே, கொடைக்கானல் மலைப் பகுதியில் போதிய மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து குறைந்து வந்தது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாத நிலை இருந்தது. மேலும், அருவிப் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது, இதனால் சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்ல சனிக்கிழமை வனத் துறையினா் தடை விதித்து இருந்தனர்.
பராமரிப்பு பணிகள் இன்று காலை 10 மணிக்குள் நிறைவடையும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது.