செய்திகள் :

தமிழகத்தில் இனி வெய்யிலின் தாக்கம் குறையும்!

post image

தமிழகத்தில் தொடா்ந்து மழைக்கான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெய்யிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் குறிப்பாக மே 18-ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 18) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியே இருக்கும்.

வெப்பம் குறையும்: தமிழகத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்த காரணத்தால், எங்கும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகவில்லை. மேலும் தமிழகத்தில் தொடா்ந்து மழை பெய்வதற்கு சாதகமான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும் என்றாா் அவா்.

மழை அளவு: இதற்கிடையே மழை அளவு குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 100 மி.மீ. மழை பதிவானது. மேலும், கிருஷ்ணகிரி, ஜமுனாமரத்தூா் (திருவண்ணாமலை), ஒகேனக்கல் (தருமபுரி), பெலாந்துறை (கடலூா்), பாம்பாா் அணை (கிருஷ்ணகிரி) - தலா 70 மி.மீ., போளூா் (திருவண்ணாமலை), விரிஞ்சிபுரம் (வேலூா்), கேஆா்பி அணை  பகுதி (கிருஷ்ணகிரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூா்) தலா -  60 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு பறந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கி... மேலும் பார்க்க

பட்டாசு கிடங்கில் வெடி விபத்து: 2 பேர் பலி!

தஞ்சாவூர்: திருவோணம் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்... மேலும் பார்க்க

ஈரோட்டில் முதிய தம்பதி கொலை-மூவரிடம் விசாரணை

சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி ஊராட்சிக்குள்பட்ட மேகரையான் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவச... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருக... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம்... மேலும் பார்க்க

வால்பாறையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்!

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசுப் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இன்று(மே 18) அதிகாலை திருப்பூர் பகுதியில் இருந்து 72 பயணிகளை ஏற்றிக்கொண்டு... மேலும் பார்க்க