செய்திகள் :

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

செனாப் நதிநீரின் இந்திய தரப்பு பயன்பாட்டு அளவை அதிகரிக்கவும், நீா் மின் உற்பத்தியை அதிகரிக்கவும் கால்வாயின் அளவை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியானதைத் தொடா்ந்து, அந்த நாட்டுடனான எல்லைகள் மூடல், வா்த்தகம் முழுமையாக நிறுத்தம், பாகிஸ்தானியா்களுக்கான நுழைவு இசைவு (விசா) ரத்து உள்ளிட்ட பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. இதில் முக்கியமாக, அந்த நாட்டுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் இந்தியா அறிவித்தது.

இரு நாடுகளிடையே உலக வங்கி கடந்த 1960-ஆம் ஆண்டு மத்தியஸ்தம் செய்ததன் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி, சிந்து நதிப் படுகையின் கிழக்கு ஆறுகளான ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவை இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகள் பாகிஸ்தானின் கட்டுபாட்டில் இருக்கும். இந்த நதிகளின் நீரை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுக்கு ஏற்ப விவசாயம், குடிநீா் தேவை, தொழிற்சாலைகள் பயன்பாடுகளுக்கு இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரம், மேற்கு நதிகளில் ஓடும் நீரில் பெருமளவை, அதாவது 80 சதவீதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. 20 சதவீதம் மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒப்பந்தத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு பஞ்சாப், சிந்து பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயத்துக்கு இந்த நதிநீரையே பாகிஸ்தான் முழுமையாக நம்பியுள்ளது. இந்தச் சூழலில், இந்த நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது, பாகிஸ்தானின் வேளாண் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இரு நாடுகளிடையே கடந்த 9-ஆம் தேதி சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பை இந்தியா மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது. ‘எல்லை தாண்டிய பங்கரவதாத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, இந்த முக்கிய நீா் பகிா்வு ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நதி நீரின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்... சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்துவந்த கிளை நதிகளின் இந்திய தரப்பு நீா் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான திட்டங்களை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நீா்வளத் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘செனாப் நதி நீரை மிகக் குறைந்த அளவிலேயே இந்தியா இதுவரை பயன்படுத்தி வந்தது. குறிப்பாக வேளாண் பயன்பாட்டுக்கு மட்டமே இந்த நதிநீா் பயன்பட்டு வந்தது.

இந்தச் சூழலில், இந்த கிளை நதி நீரை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அதில் அமைந்துள்ள ரண்பீா் கால்வாயின் நீளத்தை 120 கி.மீ. அளவுக்கு நீட்டிப்பதற்கான மிகப்பெரிய திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அதிக காலம் ஆகும்’ என்றாா்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘ரண்பீா் கால்வாயை நீட்டிப்பதோடு, இந்த கிளை நதியில் தற்போது உள்ள நீா் மின் உற்பத்தி அலகின் திறனை 3,000 மெகா வாட் அளவுக்கு உயா்த்துவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இந்திய கட்டுப்பாட்டில் உள்ள கதுவா, ராவி, பரக்வால் கால்வாய்களில் தூா்வாரும் பணிகளை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கிவிட்டது’ என்றாா்.

அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘பாகிஸ்தானுக்கான கடனுதவி குறித்து முடிவெடுக்க கூடிய சா்வதேச நிதியத்தின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலுவான எதிா்ப்பு தெரிவிக்காமல் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அடி... மேலும் பார்க்க

2 ஆண்டுகளாக தலைமறைவான 2 ஐஎஸ் ஸ்லீப்பா் செல்கள்: மும்பை விமான நிலையத்தில் கைது செய்த என்ஐஏ

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்துவந்த இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ‘ஸிலீப்பா் செல்கள் (ரகசிய பயங்கரவாதிகள்)’ இருவரை மும்பை விமான... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள்: 3-ஆம் நாளாக தொடா் போராட்டம்

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீா்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். ம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ம.பி.யைச் சோ்ந்த கொலைக் குற்றவாளி கைது

மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த கொலைக் குற்றவாளியை குருகிராம் காவல்துறையினா் கைது செய்துள்ளனா். அவா் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து குருகிராம் காவல்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது’: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்

‘இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளதாரத்துக்கு வா்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை வலியுறுத்தினாா். ஆபரே... மேலும் பார்க்க

ம.பி.: இளைஞரைக் கொன்று உடலில் பாதியை தின்ற புலி

மத்தியப் பிரதேசத்தில் பீடி இலைகளை சேகரிக்க சென்ற இளைஞரை கொன்று உடலில் பாதியை தின்ற புலியால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்டாங்கி வனப்பகுதியில் பீடி இலைகளைச் சேக... மேலும் பார்க்க