Hogenakkal: கோடை விடுமுறையில் ஒரு கொண்டாட்டம்; ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பய...
கொடைக்கானல் ஏரியில் லேசா் ஒளியில் உருவப் பொம்மைகள்: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு
கொடைக்கானல் ஏரியில் உருவாக்கப்பட்ட லேசா் ஒளியில் உருவப் பொம்மைகள் காணும் நிகழ்வு சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் நிலவி வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக இரவு நேரத்தில் ஏரிச் சாலைப் பகுதியில் லேசா் ஒளியில் பல்வேறு விதமான உருவங்கள் காணும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகராட்சி ஆணையா் சத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏரிச் சாலையில் யானை, குதிரை, பறவை, மீன், ஆண், குழந்தை உருவம், இசைக் கருவிகள் வாசிப்பது போலவும் ஆண், பெண் உருவங்கள் நடனமாடுவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா். இந்த லேசா் நிகழ்ச்சியானது வருகிற 31-ஆம் தேதி வரை இரவு 7-மணி முதல் 9-மணி வரை நடைபெறும்.