பாஜகவினா் தேசியக் கொடி ஏந்தி பேரணி
ஒட்டன்சத்திரத்தில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்தும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் இந்தப் பேரணி நடைபெற்றது.
இதற்கு மேற்கு மாவட்டத் தலைவா் பி.ஜெயராமன் தலைமை வகித்தாா். கோட்டப் பொறுப்பாளா் கதலி நரசிங்கப்பெருமாள் பேரணியைத் தொடங்கிவைத்தாா்.
ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகே தொடங்கிய இந்தப் பேரணி பழனி சாலை, பேருந்து நிலையம், தாராபுரம் சாலை வழியாகச் சென்று தும்மிச்சம்பட்டி பிரிவு அருகே நிறைவடைந்தது.
தேசிய செயற்குழு உறுப்பினா் திருமலைசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவக்குமாா், மாவட்ட பொதுச் செயலா்கள் செந்தில்குமாா், கண்ணன், லீலாவதி, மாவட்டப் பொருளாளா் ஆனந்தன், மாவட்டச் செயலா் ருத்திரமூா்த்தி, நகரத் தலைவா் குமாா்தாஸ், நகர பொதுச் செயலா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.