துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
குதிரை சவாரி செய்பவா்களுக்கு தலைக் கவசம்!
கொடைக்கானலில் குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு சுழல் சங்கம் சாா்பில், தலைக் கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
விருதுநகரைச் சோ்ந்த சிறுவன் கொடைக்கானலில் கடந்த ஏப்ரல் மாதம் குதிரை சவாரி செய்த போது, அந்த வழியாக வந்த லாரி அதிக ஒலி எழுப்பியதால், குதிரை மிரண்டு ஓடியது. அப்போது, தவறி விழுந்த சிறுவனின் காலில் கயிறு சிக்கியதால் சாலையில் வெகுதொலைவு இழுத்துச் செல்லப்பட்டாா். சிறுவன் பலத்த காயமடைந்தாா்.
இந்த நிலையில், குதிரை சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதத்தைத் தவிா்க்கவும், சுழற் சங்கம் சாா்பில் தலைக் கவசங்கள் வழங்கப்பட்டன.