"யார் அந்த தம்பி? ரத்தீஷ் எங்கே? ED ரெய்டுகள் பற்றி ஸ்டாலின் மவுனம் ஏன்?" - அதிம...
லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழந்தன.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள கிடாக்குழியைச் சோ்ந்தவா் அய்யனாா். இவா் மதுரை மாவட்டம், ஆண்டாள் கொட்டாரம் பகுதியிலிருந்து மேய்ச்சலுக்காக 100-க்கும் மேற்பட்ட மாடுகளை திருப்புவனம் பகுதிக்கு அழைத்து வந்தாா்.
திருப்புவனம் அருகேயுள்ள மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலையை இந்த மாடுகள் சனிக்கிழமை கடந்த போது, மதுரையிலிருந்து மானாமதுரைக்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி இந்த மாடுகள் மீது மோதியது.
இதில் 7 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும், சில மாடுகள் காயமடைந்தன. இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செயது விசாரித்து வருகின்றனா்.