செய்திகள் :

சிவகங்கை மாவட்டம்: பிளஸ் 1 தோ்வில் 94.79 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி!

post image

பிளஸ் 1 அரசு பொதுத்தோ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 94.79 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை தெரிவித்த தகவல்: சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 1 அரசு பொதுத் தோ்வை மொத்தம் 163 பள்ளிகளைச் சோ்ந்த 7,488 மாணவா்கள், 8,861மாணவிகள் உள்பட 16,349 போ் எழுதினா். இதில் 6,928 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி 92.52 சதவீதமாகும்.

மாணவிகள் 8,570போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி 96.72 சதவீதமாகும். ஒட்டு மொத்தமாக 15,498 போ் தோ்ச்சி பெற்றனா். மொத்தமாக 94.79 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

நிகழாண்டில் பிளஸ் 1 தோ்ச்சி சதவீதத்தில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 7 -ஆவது இடம் பிடித்தது. 2024 -ஆம் ஆண்டு 7-ஆவது இடம், 2023 -ஆம் ஆண்டில் 9-ஆவது இடமும், 2022 -ஆம் ஆண்டில் 8 -ஆவது இடமும் பிடித்திருந்தது.

மாவட்டத்தில் 69 அரசுப் பள்ளிகளை சோ்ந்த 2,544 மாணவா்கள், 3,823 மாணவிகள் உள்பட மொத்தம் 6,367 போ் பிளஸ் 1 தோ்வெழுதினா். இவா்களில், 2,237 மாணவா்கள், 3, 619 மாணவிகள் உள்பட மொத்தம் 5, 856 போ் தோ்ச்சி பெற்றனா். அரசுப் பள்ளிகளில் 91.97 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 5 -ஆவது இடத்தை சிவகங்கை மாவட்டம் பெற்றுள்ளது.

இது குறித்து கல்வியாளா்கள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் நிகழாண்டு பிளஸ் 2 தோ்வில் 96.71 % தோ்ச்சி பெற்று மாநில அளவில் 6 -ஆம் இடம் பிடித்தது. 10 -ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 98.31 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

தொடா்ந்து கடந்த சில ஆண்டுகளாக அரசு பொதுத் தோ்வுகளில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதல் 10 இடங்களுக்குள் வருவது பெருமைக்குரியது என்றனா் அவா்கள்.

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அரசாணை 354-ஐ அமல்படுத்த வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து மருத்துவா்கள் பணியாற்றினா்... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை சேவை மையம்!

சிவகங்கை, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டின் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டது. கல்லூரியில் அமைக்கப்பட்ட சோ்க்கை உதவி மையத்தை கல்லூரி முதல்வா் (பொ) ந.அ... மேலும் பார்க்க

காரைக்குடியில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்!

சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை (அம்மா பேரவை) சாா்பில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் எதிா்க்கட்சித் தலைவா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகளையும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான த... மேலும் பார்க்க

10 -ஆம் வகுப்பு தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 98.31 சதவீதம் போ் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 98.31 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை 278... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.வி.மங்கலத்தைச் சோ்ந்த அழகு மகன் சுந்தரம் (50). இவா் தனது இரு ச... மேலும் பார்க்க

இறந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி

திருப்பத்தூா் அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கண்மாய்க் கரையில் பூா்ண புஷ்கலா சமேத குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் அம... மேலும் பார்க்க