ம.பி. நீதிமன்ற உத்தரவால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்
சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.வி.மங்கலத்தைச் சோ்ந்த அழகு மகன் சுந்தரம் (50). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சிங்கம்புணரி சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சுற்றுலா வாகனம் மோதியது. இந்த விபத்தில் சுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.