ஓராண்டில் 3 கோப்பைகள்: ஊர்வலம் சென்ற பார்சிலோனா, 6 லட்சம் ரசிகர்கள் பங்கேற்பு!
``அயராத அர்ப்பணிப்பு, ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இது'' - சாதனைப் படைத்த நீரஜ் சோப்ரா; வாழ்த்திய மோடி
90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா புதிய சாதனையைப் படைத்து இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்திருக்கிறார்.
தடகள வீரரான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் சர்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்ந்திருந்த நீரஜ் சோப்ரா மேலும் ஒரு சாதனையைப் படைத்து இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்திருக்கிறார்.

கத்தார் நாட்டின் தோஹாவில் டைமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய வீரர்களான நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் ஆகிய 4 பேரும் பங்கேற்கின்றனர். இதுபோன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் அதிகளவிலான இந்திய வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை.
இந்த நிலையில், தனது 18-வது டைமண்ட் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறார்.
இதன் மூலம், 90 மீட்டர் என்ற அளவை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் 25-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் நீரஜ் சோப்ரா.
பலரும் நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

“ ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அற்புதமானச் சாதனையைப் படைத்திருக்கிறார். இந்தியா பெருமைக் கொள்கிறது.
தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்ததற்கு வாழ்த்துகள். நீரஜ் சோப்ராவின் அயராத அர்ப்பணிப்பு, ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இது” என்று வாழ்த்தி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...