இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார்? வாசிம் ஜாஃபர் கூறுவதெ...
Mumbai Indians : 'ப்ளே ஆப்ஸூக்காக ஜானி பேர்ஸ்டோவை அழைத்து வருகிறதா மும்பை?' - லேட்டஸ்ட் அப்டேட்
இந்தியா - பாகிஸ்தான் பதற்றநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிகள் தள்ளிப்போய் தேதி மாறியதால் சில வெளிநாட்டு வீரர்கள் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மும்பைக்கும் அதே சிக்கல் இருக்கிறது. இதை தவிர்க்க மும்பை அணி சில வீரர்களை மாற்று வீரர்களாக ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வரும் ரையான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், கார்பின் போஸ்ச் ஆகியோர் ப்ளே ஆப்ஸ் நடைபெறும் போது இங்கே இருக்கமாட்டார்கள். வில் ஜாக்ஸ் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஓடிஐ தொடரில் இங்கிலாந்து சென்றுவிடுவார். மற்ற இருவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆட பயிற்சி முகாமுக்கு சென்றுவிடுவார்கள். இந்த மூவரில் வில் ஜாக்ஸூம் ரையான் ரிக்கல்டனும் மும்பை அணிக்கு ரொம்பவே முக்கியமானவர்கள்.
ஓப்பனிங் இறங்கும் ரையான் ரிக்கல்டன் இந்த சீசனில் 336 ரன்களை எடுத்திருக்கிறார். மும்பை அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதேமாதிரி வில் ஜாக்ஸ் 195 ரன்களை எடுத்திருக்கிறார். 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திக் கொடுத்திருக்கிறார். ஆனால், மும்பை அணி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெறும்பட்சத்தில் இவர்கள் இருவராலுமே ஆட முடியாது.

அதனால் இவர்களுக்குப் பதிலாக ஜானி பேர்ஸ்டோவையும் ரிச்சர்ட் க்ளீஸனையும் ஒப்பந்தம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேமாதிரி, நியூசிலாந்து வீரர் பெவான் ஜேக்கப்ஸூடனும் மும்பை இந்தியன்ஸ் அணி பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.