சிவகங்கை மாவட்டம்: பிளஸ் 1 தோ்வில் 94.79 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி!
'முதியோர் இருக்கையில் அமரக் கூடாது' - முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம்!
சென்னை வண்டலூர் அரசு பேருந்து ஒன்றில் முதியவர் ஒருவர் பயணத்திற்காக ஏறியிருக்கிறார்.
அப்போது அவர் முதியோர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரை அந்த இடத்தில் இருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இறங்க சொல்லும் வீடியோ இன்று காலையில் சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில்... அந்த முதியோரை கீழே இறக்கிவிட்டு, நடத்துநர் அவரை தாக்க, முதியவரும் திரும்ப தாக்குகிறார். பின்னர், ஓட்டுநரும் இறங்கி வந்து அந்த முதியவரை தாக்குகிறார்.
இந்த வீடியோ வைரலாக, விசாரணைக்கு பிறகு அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரை எம்.டி.சி இயக்குநர் பிரபு சங்கர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.