திருச்சி பஞ்சப்பூரில் 3.5 கி.மீ. தொலைவுக்கு ஆறு வழிச்சாலை: கே.என். நேரு
லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
மேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், கீழவளவு அய்யனாா் வாக்கம்பட்டியைச் சோ்ந்த பெரிய பனையன் மகன் அய்யனாா் (30). இவா் இரு சக்கர வாகனத்தில் மேலூா்-அழகா்கோவில் சாலையில் தனது நண்பருடன் வியாழக்கிழமை இரவு சென்றாா்.
அரிட்டாப்பட்டி சந்திப்பில் சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அய்யனாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.