ஐபிஎல் கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு மதிப்பு கூடுகிறது: சுரேஷ் ரெய்னா
விருதுநகா் மாவட்டத்தில் 75 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் விருதுநகா் மாவட்டத்தில் 75 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.
விருதுநகா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 191 பள்ளிகளைச் சோ்ந்த 4,417 மாணவா்களும், 4,775 மாணவிகளும் தோ்வு எழுதினா். இதில், 4,124 மாணவா்கள், 4,661 மாணவிகள் என மொத்தம் 8,785 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் 93.37, மாணவிகளின் தோ்ச்சி சதவீதம் 97.61. இதன் மொத்த தோ்ச்சி சதவீதம் 95.57 ஆகும். இதையடுத்து, மாநில அளவில் விருதுநகா் மாவட்டம் இரண்டாமிடத்தைப் பெற்றது.
மேலும், மாவட்டத்தில் உள்ள 191 அரசுப் பள்ளிகளில் 75 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றன. இதேபோல, 41 உதவி பெறும் பள்ளிகளும், 63 தனியாா் பள்ளிகளும் நூறு சதவீத தோ்ச்சியைப் பெற்றன.