தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்த டு பிளெஸ்ஸிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!
ஐபிஎல் கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு மதிப்பு கூடுகிறது: சுரேஷ் ரெய்னா
இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 சீசன் மீண்டும் இன்றுமுதல் (மே.17) தொடங்குகின்றன.
போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் முக்கியமான கடத்தினை அடைந்துள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் நிபுணர்களான சுனில் கவாஸ்கர், சுரேஷ் ரெய்னா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிரஸ் ரூமில் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பேசியது கவனம் ஈர்த்துள்ளது.
இன்றிரவு 7:30 மணிக்கு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தனது சொந்த மண்ணில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் மோதவிருக்கிறது.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு குறித்தும் ஐபிஎல் கோப்பையின் வெற்றி குறித்தும் ரெய்னா கூறியதாவது:
இந்த வருடம் ஆர்சிபி ஒரு புதிய அணியாக விளையாடுகிறது. இந்த சீசனில் 150, 136 ரன்களை கூட கட்டுப்படுத்தியுள்ளனர்.
புதிய கேப்டன் ரஜத் படிதார் சிஎஸ்கேவை இருமுறை தோற்கடித்துள்ளார். ஆர்சிபின் ஓய்வறை உற்சாகமாக உள்ளது. இது விராட் கோலிக்கான வெற்றி ஆண்டாக இருக்கலாம்.
ஒரு கோப்பையை வென்ற பிறகு, கேப்டனாக ஒரு வீரரின் மதிப்பும், அவரது முடிவுகளுக்கும் கிடைக்கும் ஆதரவும் மாறுகிறது. அதனால்தான் ஐபிஎல் வெற்றி மிக முக்கியம் எனக் கூறினார்.
17 ஆண்டுகளாக ஆர்சிபி கோப்பை வெல்லாமல் இருக்கிறது. அதனால் இந்த சீசனை அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.