சாத்தான்குளம் அருகே கிணற்றில் பாய்ந்த ஆம்னி வேன்: 5 பேரும் பலி
Soori: 'என்னோட பேரு ராமன்; ரஜினி சார் படத்தைப் பார்த்துதான்..!' - நடிகர் சூரி சொல்லும் பெயர் காரணம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருந்தார் பிரசாந்த் பாண்டியராஜ்.
இவர் விமலை வைத்து இயக்கியிருந்த ‘விலங்கு’ வெப்சீரிஸ் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

இதன்பின் பிரசாந்த் பாண்டியராஜ் - சூரியை வைத்து ‘மாமன்’ படத்தை இயக்கி இருக்கிறார். ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடித்திருக்கிறார். தவிர, ராஜ்கிராண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் நேற்று (மே 16) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இப்படம் வெளியாவதற்கு முன்பு படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மலையாள தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சூரி தன்னுடைய பெயர் காரணம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “ என்னோட பெயர் ராமன். ‘தளபதி’ படத்தில் ரஜினி சாரோட பெயர் சூர்யா’னு இருக்கும்.
அதைப் பார்த்துதான் என்னோட பெயரை மாத்திகிட்டேன். ரஜினி சாரோட மிகப்பெரிய ரசிகன்நான். மம்முட்டி சார் ரஜினி சாரை சூர்யா’னு கூப்பிடுற ஸ்டைல் நல்லா இருக்கும். அதேபோல ரஜினி சார் தேவா’னு மம்முட்டி சாரை அந்தப் படத்துல கூப்பிடுறதும் நல்லா இருக்கும்.
தியேட்டர்ல படத்தைப் பார்த்திட்டு வந்து எங்க அம்மா கிட்ட இனிமேல் என்னைய சூர்யா’னு கூப்பிடுன்னு சொன்னேன். எங்க அம்மா அது யாரு’னு கேட்டாங்க…” என்று மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் பேசியிருக்கிறார்.