செய்திகள் :

``தோனி டெஸ்ட்ல ரிட்டையர் ஆகிட்டு இன்னும் ஐ.பி.எல் ஆடுறாரு, ஆனா கோலி..'' - சஞ்சய் மஞ்சரேக்கர்!

post image

'கோலி பற்றி சஞ்சய் மஞ்சரேக்கர்!'

பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. மழையினால் போட்டி தாமதமாகியிருக்கிறது. டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விராட் கோலி ஆடப்போகும் முதல் போட்டி இது.

Sanjay Manjrekar
Sanjay Manjrekar

அதனால் இந்தப் போட்டிக்கு முன்பாக பலரும் விராட் கோலியின் டெஸ்ட் கரியரிரை பற்றிய தங்களின் அபிப்ராயங்களை பகிர்ந்திருந்தனர். அதில் வர்ணணையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் தோனியுடன் கோலியை ஒப்பிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார்.

'கோலியின் உச்சக்கட்ட பார்ம்!'

சஞ்சய் மஞ்சரேக்கர் பேசியதாவது, 'விராட் கோலி என்கிற பெயரை கேட்டாலே ரசிகர்கள் காந்தம் போல ஈர்க்கப்படுகின்றனர். பல ஆண்டுகால கடின உழைப்பால்தான் விராட் கோலி இந்த நிலையை எட்டினார். 2010-11 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அடிலெய்ட் டெஸ்ட்டில் கோலி சதமடித்திருப்பார். அந்தத் தொடரில் இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட ஒரே சதம் அதுதான்.

Virat Kohli
Virat Kohli

2015 - 19 காலக்கட்டத்தைதான் அவரின் உச்சக்கட்டம் என்பேன். அந்த சமயத்தில் அவரின் ஆவரேஜ் 63. மேலும், கோலி மற்ற இந்திய பேட்டர்களிலிருந்து வித்தியாசமானவர். அவர்களிலிருந்து இவரின் பாணியும் குணாதிசயமும் வேறு. கோலி இப்போதைய சாதிக்க துடிக்கும் இளம் தலைமுறையின் துடிப்பான பிரதிநிதியாக இருந்தார்.

'தோனியை விட...'

கிரிக்கெட்டை விட தனிப்பட்ட வீரர்கள் பெரிதில்லை என்பார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் அபாயத்தில் இருந்தபோது கோலிதான் தன்னுடைய ஆட்டத்தின் வழி டெஸ்ட் போட்டியை நோக்கி கவனத்தை ஈர்த்தார். தோனி 2014 லிலேயே டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், இன்னமும் ஐ.பி.எல் இல் ஆடிக்கொண்டிருக்கிறார். கோலி அப்படியில்லை.

Virat Kohli
Virat Kohli

கோலி தன்னால் முடிந்தளவுக்கு நீண்ட காலமாக டெஸ்ட் கிரிக்கெட் ஆடியிருக்கிறார். கோலிக்கு டெஸ்ட் போட்டிகள் தேவை என்பதை விட, டெஸ்ட் போட்டிகளுக்குதான் கோலி தேவைப்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் அந்த 4 இன்னிங்ஸ்களிலும் ரொம்பவே அயர்ச்சியோடு சுவாரஸ்யமே இல்லாமல் ஆடிய காலமெல்லாம் உண்டு

Virat Kohli
Virat Kohli

2011 இங்கிலாந்தில் போராடாமலேயே தோற்றோம். ஒரு முறை நியூசிலாந்துக்கு சென்றிருப்போம். அங்கே மெக்கல்லம் நமக்கு எதிராக முச்சதம் அடிப்பார். இந்திய அணி எந்தவிதத்திலும் சவாலளிக்காமல் வெற்றிக்கான போராட்டமே இல்லாமல் போன காலக்கட்டமெல்லாம் இருந்தது. கோலி கேப்டனாக ஆன பிறகு அப்படி ஒரு போட்டியை கூட பார்க்கவில்லை. ஏன், ஒரு செஷனை கூட பார்த்ததில்லை. தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்கிற துணிச்சலோடு வெற்றிக்காக முயற்சி செய்வார்.' என்றார்.

``விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டின் தூதுவன்!'' - சின்னசாமியில் நெகிழ்ந்த ஹர்ஷா போக்லே!

பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. மழையினால் போட்டி தாமதமாகியிருக்கிறது. டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விராட் கோலி ஆடப்போகும் முதல் போட்ட... மேலும் பார்க்க

RCBvsKKR : '8:45 மணி வரை கெடு; மழை தொடர்ந்தால் ஓவர் எப்படி குறையும்?

'சின்னசாமியில் மழை!'பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. மழையின் காரணமாக போட்டியின் டாஸ் தாமதமாகியிருக்கிறது. ஒருவேளை, மழை விடாது பெய்யும்... மேலும் பார்க்க

Rohit: "வான்கடே இப்போது மேலும் ஐகான் ஆகிவிட்டது' - ரோஹித்துக்கு சூர்யகுமார் யாதவ் புகழாரம்

மும்பை கிரிக்கெட் சங்கமானது (MCA), இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று ஸ்டேண்ட் திறந்துவைத்து அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது.வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இ... மேலும் பார்க்க

ஏலத்தில் எடுப்பதாகக் கூறி எடுக்காத RCB; அதே அணிக்கு கேப்டன்; கோலியின் ஆதரவு - பட்டிதார் ஷேரிங்ஸ்

நடப்பு ஐ.பி.எல் சீசனில், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ள அணியாக ஆர்.சி.பி இருக்கிறது. 11 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கேப்டனாக ரஜத்... மேலும் பார்க்க

Rohit Sharma: "இதை நான் கனவில் நினைத்ததில்லை" - வான்கடேவில் கௌரவித்த MCA; நெகிழ்ந்த ரோஹித்

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மும்பை வான்கடே மைதானம். இந்த மைதானத்தில், சில ஸ்டேண்டுகளுக்கு சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வினூ மன்கட், திலீப் வெங்சர்க்கார் ஆகிய முன்னாள் வீரர... மேலும் பார்க்க

Ashwin: 'சுப்மன் இல்ல... இவர இந்திய அணிக்கு கேப்டனா போடுங்க...'- அஷ்வின் ஓப்பன் டாக்

ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அல்லது ரவீந்திர ஜடேஜாவை அணியி... மேலும் பார்க்க