செய்திகள் :

Rohit Sharma: "இதை நான் கனவில் நினைத்ததில்லை" - வான்கடேவில் கௌரவித்த MCA; நெகிழ்ந்த ரோஹித்

post image

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மும்பை வான்கடே மைதானம். இந்த மைதானத்தில், சில ஸ்டேண்டுகளுக்கு சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வினூ மன்கட், திலீப் வெங்சர்க்கார் ஆகிய முன்னாள் வீரர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வரிசையில், இந்திய அணிக்கு 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையும், 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியும் வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் பெயரை, வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டேண்டுக்கு வைத்து அவரை கௌரவித்திருக்கிறது மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA).

வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மா பெயரிலான ஸ்டேண்ட் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தன் பெற்றோர் மற்றும் மனைவி ரித்திகா முன்னிலையில் எமோஷனலாக உரையாற்றிய ரோஹித் சர்மா, "இன்று நடப்பது, கனவிலும்கூட நான் நினைக்காதது.

முடிந்தவரை நாட்டுக்காக விளையாடும்போது, நீங்கள் நிறைய சாதிக்க முயல்வீர்கள். அதனால், நிறைய மைல்கற்கள் உருவாக்கப்படுகின்றன. இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

வான்கடே ஒரு ஐகானிக் மைதானம். இங்கு நிறைய நினைவுகள் இருக்கின்றன. விளையாட்டின் சிறந்த வீரர்கள், உலகின் தலைசிறந்த அரசியல் தலைவர்களிடையே எனது பெயர் இடம் பெற்றிருக்கிறது.

இப்போது என்ன உணர்கிறேன் என்பதை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. இதற்காக, MCA உறுப்பினர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

நான் விளையாடிக்கொண்டிருக்கும்போதே எனக்கு மரியாதை அளிக்கப்படுவது ஸ்பெஷலாக இருக்கிறது. இரண்டு ஃபார்மட்டுகளிலிருந்து நான் ஓய்வுபெற்றுவிட்டேன். ஆனாலும், இன்னும் ஒரு ஃபார்மட்டில் நான் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

மே 21-ம் தேதி டெல்லிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் அணியில் இங்கு களமிறங்கும்போது அதுவொரு ஸ்பெஷல் உணர்வாக இருக்கும்.

ரோஹித் சர்மாவின் குடும்பம்
ரோஹித் சர்மாவின் குடும்பம்

அதோடு, இந்திய அணி இங்கு எந்த அணியுடன் விளையாடினாலும் அது மேலும் ஸ்பெஷலாக இருக்கும். என் அம்மா, அப்பா, என் சகோதரர், அவரின் மனைவி, என் மனைவி முன்னிலையில் இந்த கௌரவத்தைப் பெறுகிறேன்.

என் வாழ்வின் அனைத்து நபர்களுக்கும், அவர்கள் செய்த தியாகங்களுக்கும் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்." என்று நெகிழ்வாகக் கூறினார்.

ஏலத்தில் எடுப்பதாகக் கூறி எடுக்காத RCB; அதே அணிக்கு கேப்டன்; கோலியின் ஆதரவு - பட்டிதார் ஷேரிங்ஸ்

நடப்பு ஐ.பி.எல் சீசனில், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ள அணியாக ஆர்.சி.பி இருக்கிறது. 11 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கேப்டனாக ரஜத்... மேலும் பார்க்க

Ashwin: 'சுப்மன் இல்ல... இவர இந்திய அணிக்கு கேப்டனா போடுங்க...'- அஷ்வின் ஓப்பன் டாக்

ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அல்லது ரவீந்திர ஜடேஜாவை அணியி... மேலும் பார்க்க

'ரோஹித், கோலி ஓய்வை நினைச்சு பயப்படாதீங்க, நம்ம இந்திய அணி...'- சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்வது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக... மேலும் பார்க்க

Kohli: ``விராட் கோலி ஓய்வு முடிவுக்கு காரணம் இதுதான்..'' - ரவி சாஸ்திரி ஓபன் டாக்

விராட் கோலி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றது குறித்து ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார். "ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு வாரம் முன்பே நானும், விராட் கோலியும் பேசினோம். அவரது மனநிலை அப்பொழ... மேலும் பார்க்க

இது IPL இல்ல JPL; சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனுக்காக உ.பி-யில் கிரிக்கெட் தொடர்!

ஐபிஎல் கொண்டாட்டம் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சிறைக் கைதிகளின் உடல் மற்றும் மன நலன்களுக்காக சிறை வளாகத்துக்குள்ளேயே ஜெயில் பிரீமியர் லீக் (JPL) என்ற பெயரில் ... மேலும் பார்க்க

IPL: ``CSK உன்னை கவனிக்கிறது’ என அவர்தான் முதலில் சொன்னார்’ - ஆயுஷ் மாத்ரே சொல்லும் MI வீரர் யார்?

ஐபிஎல் தொடர் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது. இதில், சி.எஸ்.கே அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மிச்சமிருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது.இருப்பினும், ... மேலும் பார்க்க