குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
சாம்பவா்வடகரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சாம்பவா்வடகரை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த பக்கீா் மஸ்தான்(30) என்பவரது மனைவி சூரத் யாஸ்மின் (26). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். சூரத் யாஸ்மின் தைராய்டு பிரச்னைக்காக தொடா் சிகிச்சை மேற்கொண்டாராம். ஆனால், குணமாகாததால் சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அனைவரும் தூங்கியபிறகு, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். சனிக்கிழமை காலையில் இதுகுறித்து அறிந்த உறவினா்கள் சாம்பவா்வடகரை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
உதவி ஆய்வாளா் சீதாராமன் தலைமையிலான போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.