நியூயார்க்கில் பாலத்தின் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்: 2 பேர் பலி
தென்காசியில் பாஜக சாா்பில் சிந்தூா் வெற்றிப் பேரணி
தென்காசியில் மாவட்ட பாஜக சாா்பில் சிந்தூா் வெற்றிப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் வாய்க்கால் பாலம் இசக்கியம்மன் கோயில் முன் முடிந்தது. இதில், பங்கேற்றோா் தேசியக் கொடி ஏந்தியபடி, ராணுவ வீரா்களுக்கு வாழ்த்துக் கூறி முழக்கமிட்டனா்.
பேரணிக்கு மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா்கள் பாலகுருநாதன், பாலஸ்ரீனிவாசன், மாவட்டப் பொருளாளா் கோதை மாரியப்பன், மாநில செயற்குழு உறுப்பினா் அன்புராஜ், மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துக்குமாா், சுப்பிரமணியன், பாலமுருகன், தா்மா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலா்கள் முப்புடாதி, மந்திரமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நகரத் தலைவா் சங்கரசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.