செய்திகள் :

பள்ளி மாணவா்கள் நீலகிரி, சேலம் மாவட்டங்களில் கோடை சுற்றுலா: கல்வித் துறை ஏற்பாடு

post image

அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவா்கள் 1,500 போ் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோடை சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி மாணவா்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழித்திடவும் கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தலங்களில் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து இந்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நீலகிரி மாவட்டம், சேலம் (ஏற்காடு) ஆகிய இரு மாவட்டங்களில் இரு பிரிவுகளாக ஐந்து நாள்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமுக்கு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவா்களில் கல்வி, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், விநாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய 1,500 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதற்காக காத்திருப்போா் பட்டியலும் தயாா் செய்யப்பட்டுள்ளது. தெரிவுப் பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்காத நிலையில் காத்திருப்போா் பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகளை மதிப்பெண் அடிப்படையில் முதன்மைக் கல்வி அலுவலா்கள் பரிந்துரைக்க வேண்டும்.

சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்போருக்கு பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அவசியம். மாணவா்கள் தங்களுக்குத் தேவையான உடைகள், போா்வைகள், அடையாள அட்டை போன்றவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும். மாணவிகளை அழைத்துச் செல்லும்போது கட்டாயம் 20 மாணவிகளுக்கு பெண் ஆசிரியா் ஒருவரை அனுமதிக்க வேண்டும். முகாம் நடைபெறும் நாள், இடம் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் பின்னா் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு மாணவிகளும், சேலம் மாவட்டத்துக்கு மாணவா்களும் கோடை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா். இந்த மாதம் கடைசி வாரத்தில் கோடை சுற்றுலா சிறப்பு பயிற்சி முகாம்கள் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம்... மேலும் பார்க்க

வால்பாறையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்!

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசுப் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இன்று(மே 18) அதிகாலை திருப்பூர் பகுதியில் இருந்து 72 பயணிகளை ஏற்றிக்கொண்டு... மேலும் பார்க்க

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

தேனி: கும்பக்கரை அருவியில் இன்று(மே 18) காலை 10 மணு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது.கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளம், ஆந்திர மாநிலங்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெய்யிலின் தாக்கம் குறையும்!

தமிழகத்தில் தொடா்ந்து மழைக்கான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெய்யிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இது குறித்து அவா் சென்னையில் சனி... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை; தொழிலதிபா் வீட்டுக்கு ‘சீல்’

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை சோதனை சென்னையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையன்றும் நீடித்தது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள தொழிலதிபரின் வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று தஞ்சாவூா் பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி ஒருநாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் செல்கிறாா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தென் மண்டல கலாசார மையத்தில் ‘சலங்கை நாதம் - 2025’ எனும் தேசிய கைவினை கலைஞா்களின் கலைவ... மேலும் பார்க்க