நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை: நயினாா் நாகேந்திரன்
14 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏஞ்சலினா ஜோலி!
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 14 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வருகை தந்தார்.
78-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து திரைத் துறை பிரபலங்கள், ரசிகா்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவில் பங்கேற்ற 49 வயதாகும் ஆஸ்கர் நாயகி ஏஞ்சலினா ஜோலி வைர நெக்லஸ், உடலையொட்டியபடி வடிவமைக்கப்பட்டுள்ள கவுன் ஆடையை அணிந்துகொண்டு தமக்கே உரிய பாணியில் சிவப்புக் கம்பளத்தில் மிடுக்காக நடை போட, பார்வையாளர்கள் இமை சிமிட்டத் தவறினர்.
இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் இளம் நடிகர்களுக்கு சிறப்பு விருதான ‘ட்ராபி சோப்பர்ட் விருதை’ வழங்கும் கிராண்ட் மதராக ஏஞ்சலினா ஜோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.