இவர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம், பும்ரா வேண்டாம்: ரவி சாஸ்திரி
34வது அரபு லீக் உச்சி மாநாடு: ஐ.நா. பொதுச் செயலாளருடன் ஈராக் அதிபர் சந்திப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை, ஈராக் அதிபர் அப்துல் லத்தீஃப் ரஷீத் சந்தித்துள்ளார்.
ஈராக்கில் நடைபெறும் 34வது அரபு லீக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், தலைநகர் பாக்தாத்தில் நேற்று (மே 16) அவரை வரவேற்ற அந்நாட்டு அதிபர் அப்துல் லத்தீஃப் ரஷீத், மாநாட்டில் அவரது பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளதாக, அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், ஈராக் மற்றும் ஐ.நா. சபைக்கு இடையிலான நீண்டகால வளர்ச்சி மிகுந்த உறவுக்கும், அவர்களால் அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் குறித்தும் அதிபர் ரஷீத் புகழாரம் சூட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடைபெறவுள்ள மாநாடு குறித்து அதிபர் ரஷீத் கூறுகையில், மாநாட்டை ஈராக் நடத்துவது, அரபு பிராந்தியத்தில் அவர்களது புதிய பங்களிப்பையும், பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர்களது பலதரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகக் கூறியுள்ளார்.
இத்துடன், அரபு பகுதிகளில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய அதிகரித்து வரும் ஈராக்கின் பங்கை பாராட்டிய ஐ.நா. பொதுச் செயலாளர் குட்டெரெஸ், நீடித்த அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான வழிவகுக்கும் எனவும் உச்சிமாநாட்டின் ஆற்றல் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சந்திப்பில் அங்கு நடத்தப்படும் உச்சிமாநாட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதனால் உண்டாகக் கூடிய விளைவுகளின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று (மே 17) நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பாலஸ்தீன விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்காவின் படையெடுப்புக்கு பின்னர் ஈராக்கில் 2வது முறையாக இத்தகைய மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!