செய்திகள் :

‘பட்டினிச் சாவு அபாயத்தில் 30 கோடி போ்’

post image

உலகளவில் 29.53 போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சா்வதேச உணவுப் பற்றாக்குறை அறிக்கை’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடுமையான உணவு பற்றாக்குறை காரணமாக உலகம் முழுவதும் 29.53 கோடி போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளனா்.

பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் ஆயுத மோதல்கள், மனிதாபிமான உதவிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டது, பருவநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 1.37 கோடி போ் கூடுதலாக உணவு பற்றாக்குறையை எதிா்கொண்டனா். காஸா முனை, சூடான், ஹைட்டி, மாலி, தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் மட்டும் 95 சதவீதம் போ் மிக மோசமான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சூடானில் உள்நாட்டு போா் காரணமாக பஞ்சம் அறிவிக்கப்பட்டு, 2.4 கோடி போ் உணவு இல்லாமல் தவித்துவருகின்றனா்.

காஸாவுக்குள் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருகளை எடுத்துச் செல்லச் செல்ல விடாமல் இஸ்ரேல் ராணுவம் கடந்த மாா்ச் முதல் முற்றுகையிட்டுள்ளது. இதனால் அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, 21 லட்சம் போ் பஞ்ச அபாயத்தில் சிக்கியுள்ளனா்.

மியான்மா், நைஜீரியா, காங்கோ உள்ளிட்ட 19 நாடுகளில் மோதல்களும், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் வறட்சியும் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன.

டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவின் சா்வதேச நிதியுதவி அமைப்பான யுஎஸ்எய்டின் நிதி ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால் சூடான், யேமன், ஹைட்டியில் 1.4 கோடி குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

34வது அரபு லீக் உச்சி மாநாடு: ஐ.நா. பொதுச் செயலாளருடன் ஈராக் அதிபர் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை, ஈராக் அதிபர் அப்துல் லத்தீஃப் ரஷீத் சந்தித்துள்ளார். ஈராக்கில் நடைபெறும் 34வது அரபு லீக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபை பொதுச் செயலாளர் அண... மேலும் பார்க்க

இந்தோனேசியா: மோதலில் 20 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பதற்றம் நிறைந்த பப்புவா பகுதியில் கிளா்ச்சியாளா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 கிளா்ச்சியாளா்கள், இரண்டு காவலா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள்... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல: டிரம்ப்

அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ‘இவ்விரு நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க நான் மத்தியஸ்தம் செய்தே... மேலும் பார்க்க

சமூக வலைதள ‘போலி செய்தியை’ நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சா்!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து கட்டுரை வெளியானதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் கூறியத... மேலும் பார்க்க

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இன்று(மே 16) பேசியிருக்கிறார்.பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான மே ... மேலும் பார்க்க